முச்சக்கரவண்டி கட்டணங்களில் திருத்தம் இல்லை : வெளியான அறிவிப்பு

4 days ago

நாட்டில் எரிபொருள் விலைத்திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் குறித்த திருத்தம் மேற்கொள்ளப்படாது என அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “லங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 5 ரூபாவால் குறைத்திருந்தாலும், அதன் பயன் நுகர்வோருக்குச் சென்றடையாது.

எரிபொருள் விலை திருத்தம்

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய நேற்று நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில் ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டது. இதன்படி, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோலின் புதிய விலை 294 ரூபாவாகும்.

 வெளியான அறிவிப்பு | Fuel Price Reduce Three Wheelers Fares No Revision

எனினும், ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என லங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

நாங்கள் இந்த வழியில் நாற்பதுக்கும் மேற்பட்ட வருடங்கள் வந்துவிட்டோம். மேல் மாகாண சபையின் இறுதிக் கட்டணத் தீர்மானம் என்ன? அதிகபட்சம் முதல் கிலோமீற்றருக்கு 100 ரூபாய். இரண்டாவது கிலோமீற்றருக்கு 85 ரூபாய். இந்தக் கட்டணத்தில் ஓட்டும் ஒரு நியாயமான தரப்பினர் உள்ளனர்.

 சரியான கட்டணம் 

சிலரிடம் கேட்டால், 100 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் ஓடுகிறோம் என்றும் சொல்கிறார்கள். பொதுமக்கள் குறை கூறுகிறார்கள்; சுரண்டல் நடக்கிறது. நாங்கள் தொடர்ந்து நகைப்புக்குரியவர்களாக இருக்கத் தயாராக இல்லை. ஒரு வலுவான ஒழுங்குமுறையின் கீழ் விலை கட்டுப்பாடு செய்யப்பட்டால், அது ஒரு சட்டமாக மாறும்.

 வெளியான அறிவிப்பு | Fuel Price Reduce Three Wheelers Fares No Revision

சுற்றுவட்டாரத்திற்குச் செல்வது முக்கியமில்லை, ஒரு நிலையான விலை சூத்திரத்தின் படி சரியான கட்டணத்தைச் சொல்லி, மக்களுக்கு அதைத் தெரியப்படுத்தினால், தற்போதுள்ள அனைத்து மோசடிகளையும் சமன் செய்து இதைத் தொடர முடியும்.

இந்த முறையும் கட்டணத்தில் மாற்றம் இல்லை. அடுத்த முறை விலை குறைந்தாலும், அதிகரித்தாலும் திருத்தம் செய்ய மாட்டோம்," என்று அவர் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!