மீண்டும் நின்றது

1 week ago

நாகப்பட்டினத்திற்கும் - காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

பயணிகள் படகு சேவை இன்று (26) முதல் அடுத்த டிசம்பர் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கடல் பகுதிகளில் நிலவும் பாதகமான வானிலையைக் கருத்தில் கொண்டு இந்தப் பயணிகள் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.