மில்லர் திரைப்பட ஆரம்ப நிகழ்வு: யாழை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!

1 week ago

ஐபிசி தமிழ் (IBC) நிறுவனத்தின் தயாரிப்பில் முழு நீள திரைப்படமாக வெளியாகவுள்ள மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்புகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (26.10.2025) நடைபெறவுள்ளது.

அதன்படி, குறித்த நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல தென்னிந்திய பிரபலங்களும் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

ஐபிசி தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகும் நான்காவது திரைப்படமாக மில்லர் திரைப்படம் அமைந்துள்ளது.

வெற்றித் திரைப்படங்கள்  

இலங்கை தமிழ் திரைத் துறையில் இதற்கு முன்னர் ஐபிசி நிறுவனம் friday and friday மற்றும் பொம்மை போன்ற வெற்றித் திரைப்படங்களை தயாரித்து வழங்கியிருந்தது.

 யாழை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்! | Miller Movie Launch South Indian Celebrities

இந்நிலையில், மில்லர் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன், அதற்கான நிகழ்வும் இன்று மாலை நடைபெறவுள்ளது.   

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025