மாகாண சபைத் தேர்தலை நடத்த தீவிரம் காட்டும் அரசாங்கம்!

1 week ago

மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, தேர்தலை நடத்துவதற்கான முக்கிய நகர்வாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை மக்கள் நலன் சார்ந்த பாதீடாக முன்வைப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

குறித்த வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நேரடியாக தாக்கம் செலுத்தும் விதத்தில் புதிய வரிகள் எதுவும் அமுல்படுத்தப்படாது எனவும் தெரியவருகிறது.

அரசாங்கத்திற்கு ஆதரவு 

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள குழுக்கள் ஒழிப்பு போன்ற செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு தற்போது ஆதரவு கிடைத்துள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்த தீவிரம் காட்டும் அரசாங்கம்! | Government Hold Provincial Council Elections

இந்நிலையில், இவ்விடயமும் அரசாங்கத்துக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதால் விரைவில் தேர்தலை நடத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பாதீட்டு கூட்டத்தொடருக்கு மத்தியில் கட்சி தலைவர்கள் கூட்டத்தையும் ஜனாதிபதி நடத்தவுள்ளார்.

மேலும், தேர்தல் எந்த முறையில் நடத்தப்படும் என்பது தொடர்பில் உறுதியான தீர்மானமொன்றை எடுப்பதற்காகவே இக்கூட்டம் நடத்தப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.