தமிழ் மக்கள் வாழுகின்ற மட்டக்களப்பு எல்லைப்புறத்திற்கு பிக்குமார் வந்து அங்குள்ள நெடியகல்மலை எனும் பகுதியில் பௌத்த மத வழிபாட்டு தலம் ஒன்றை அமைப்பதற்குரிய செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
முன்னாள் ஆளுநரின் செயற்பாடு
“கிழக்கு மாகாணத்தில் முன்னர் ஆளுநராக இருந்த அனுராதா ஜஹம்பத் காலத்தில் அந்த ஆளுனர் மக்களுக்கு சேவை செய்த செய்த காலத்தைவிட பிரச்சனைகளைத்தான் உருவாககி ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

அந்த வரிசையில் தான் இந்த நெடியகல்மலை பகுதியிலும் அவருடைய நிர்வாகக் காலத்தில்தான் இந்த பௌத்தமத வழிபாட்டுத்தலம் ஒன்றை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்தியிருந்தார்.
பௌத்தமத மக்கள் வாழும் இடங்களில் பௌத்த வழிபாடு தலங்கள் அமைவது அது சாதாரண விடயம். இந்து மக்கள் வாழ்கின்ற பகுதியில் அவருடைய வழிபாட்டுத்தலங்களும், கிறிஸ்தவ மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் அவர்களுடைய வழிபாட்டுத் தலங்களும், இஸ்லாமிய மக்கள் வாழ்கின்ற வகையில் அவர்களுடைய வழிபாட்டுத் தலங்களும், அமைவது இயற்கையானது.
அதை ஏற்றுக் கொள்ளக் கூடியது, நியாயமானது, ஆனால் எந்த ஒரு பௌத்த சிங்கள குடிமகனும் வாழ்ந்திராத இடத்தில் அந்த நெடியகல்மலை எனும் இடத்தில் 15 கிலோமீற்றருக்கு அப்பால் இருந்து வந்து பௌத்த துறவிகள் அந்த இடத்தில் பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இது கடந்த காலத்தில் இந்த மாவட்டத்தில் இரண்டு ராஜாங்க அமைச்சர்கள் இருந்திருந்தவர்கள் அவர்களுடைய காலத்தில் இது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
அநுர ஆட்சியிலும் தொடர்ச்சி
அவர்கள் இராஜாங்க அமைச்சர்களாக இருந்த காரணத்தினால் அரசாங்கத்தின் சலுகைகளை பெறுகின்றார்கள் என்ற காரணத்தினாலும், இந்த விடயங்களை அவர்கள் கண்டும் காணாததுபோல் விட்டுவிட்டார்கள்.

இப்போது இருக்கின்ற ஆட்சியில் கூட அதன் தொடர்ச்சி காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. வனஇலாகாவுக்கு சொந்தமான அந்த பகுதியை குறித்த வன இலாகா பிரிவினர் உரிய இடத்தை பௌத்த வழிபாடு அமைப்பதற்குரிய அனுமதியை வழங்கி இருக்கின்றார்கள்.
இப்போது சர்வ சாதாரணமாக அங்கு இந்த பௌத்த வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு பௌத்த துறவிகள் வந்து செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது.
காலப்போக்கில் அவர்கள் தங்குவதற்குரிய விடுதிகள் அனைத்தும் அமைக்கப்படும். பின்னர் அவர்களை பராமரிப்பதற்கும், சேவைசெய்வதற்குரிய சிங்கள மக்களை குடியேற்ற வேண்டிய தேவை ஏற்படும், அவற்றுக்கு ஏதும் பிரச்சனைகள் ஏற்படும் வகையில் அங்கு பாதுகாப்பும் வழங்க வேண்டிய நிலைமை ஏற்படும், இராணுவ கட்டமைப்பு அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்.










