மட்டக்களப்பில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள்

1 week ago

மட்டக்களப்பில் (Batticaloa) கைவிடப்பட்டிருந்த இரு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் கைவிடப்பட்டிருந்த குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குண்டுகளை மீட்கும் நடவடிக்கை நேற்று (26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினர் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாழைச்சேனை பொலன்னறுவை பிரதான வீதியிலுள்ள வாகனேரி 125 வது மையில் கல் பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த இரு கைக்குண்டுகள் காணப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் | Two Hand Grenades Found Defused By Police

இந்த குண்டுகளை நேற்று (26) பிற்பகல் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் மீட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரகசிய தகவல் 

வாழைச்சேனை அரச புலனாய்வு துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய விசேட அதிரடிப்படையினருடன் அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சம்பவதினமான நேற்று பிற்பகல் 2.50 மணியளவில் குறித்த இடத்தில் கைவிடப்பட்ட இரு கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் | Two Hand Grenades Found Defused By Police

இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டுகளை நீதிமன்ற உத்தரவை பெற்று இன்று (27) வெடிக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!