மட்டக்களப்பில் போதைபொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட பெண்

1 week ago

மட்டக்களப்பில் (Batticaloa) போதைப்பொருள் குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளாார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - ஏறாவூரை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போதை பொருள்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஏறாவூர் பிரதேசத்தில் போதை பொருள் வியாபார விற்பனை நிலையமாக செயற்பட்டுவந்த வீடு ஒன்றை நேற்று (26) காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் போதைபொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட பெண் | Eravur Police Seize Drugs Arrest Female Dealer

இதன்போது, பெண் வியாபாரி ஒருவரை 5350 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து மூன்று இலட்சத்து 61 ஆயிரம் ரூபா பணத்தை மீட்டுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது நடவடிக்கை

மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து ஏறாவூர் காவல் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பில் போதைபொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட பெண் | Eravur Police Seize Drugs Arrest Female Dealer

கைது செய்யப்பட்ட பெண், நீண்டகாலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இன்று (27) குறித்த பெண்ணை நீதிமன்றத்தில் முன்னிலைபை்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!