பேருந்து கட்டணங்களில் மாற்றமா.... வெளியான தகவல்

4 days ago

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டதை அடுத்து பேருந்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை அகில இலங்கை தனியார் பேருந்துகள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Gemunu Wijeratne) ஊடமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது, நடைமுறையில் உள்ள கட்டணங்களுக்கமைய பேருந்து கட்டணங்கள் அறவிடப்படும் என அவர் தெரிவித்தார்.

முச்சக்கர வண்டி கட்டணம்

இதேவேளை, முச்சக்கர வண்டி கட்டணங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பேருந்து கட்டணங்களில் மாற்றமா.... வெளியான தகவல் | Fuel Price Revision Affect Bus Fares No Revision

நேற்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!