புல்மோட்டை கணிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் 14வது நாளாக போராட்டம்

1 week ago

திருகோணமலை - புல்மோட்டை கணிய மணல் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்கள் தொடர்ந்தும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த 83 ஊழியர்களுக்கும் மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை என கோரி இன்றும் (27) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

சுமார் 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமையால் பெரிதும் பொருளாதார ரீதியாக தங்களது குடும்பங்கள் பாதிக்கப்பட்டும், பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை

இது தொடர்பில் உரிய துறை சார் அமைச்சர், அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புல்மோட்டை கணிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் 14வது நாளாக போராட்டம் | Pulmodai Mineral Sands Factory Employees Protest

இந்தநிலையில், தங்களுக்கு சாதகமான தீர்வை பெற்றுத் தருமாறு கோரி சத்தியாக் கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் ”பல மில்லியன் டொலர்களை உருவாக்கும் LMSLநிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்னும் ஊதியம் வழங்காமல் மறுக்கப்படுவது ஏன்?ஜனாதிபதி அவர்களே இது உங்களின் கவனத்திற்கு" போன்ற சூலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!