பன்குடாவெளி மக்களின் முக்கிய கோரிக்கை! வீதிக்கிறங்கி கவனயீர்ப்பு

2 days ago

தபால் ஊழியர் இன்மையால் தங்களுக்கு கிடைக்கவேண்டிய கடிதங்கள் உரியநேரத்திற்கு கிடைப்பதில்லை என பன்குடாவெளி பதுளை வீதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் பன்குடாவெளி உப தபாலகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு பன்குடாவெளி, இலுப்படிச்சேனை, பாலர்சேனை, காயன்குடா, கொடுவாமடு, தம்பானம்வெளி, மயிலவெட்டுவான், மாவடிஓடை, பாலர்சேனை போன்ற கிராமங்களுக்கு உரிய நேரத்தில் கடிதங்கள் சென்றடைவதில்லை எனவும், இரண்டு பேர் பணியாற்றிய பன்குடாவெளி உப தபால் அலுவலகத்தில் தற்போது ஒருவர் மாத்திரமே கடமை புரிவதால் உரிய நேரத்திற்கு தபால் வினியோகம் செய்யமுடியாத நிலை காணப்படுவதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய கடிதங்கள் உரிய நேரத்திற்கு கிடைப்பதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

பன்குடாவெளி உப தபால் நிலையம் 

பன்குடாவெளி உப தபால் நிலையம் உள்ள பிரதேசத்தில் 8 பாடசாலைகள், நான்கு நான்கு இராணுவ முகாம்கள், ஆயுள்வேத வைத்தியசாலை, கமநல சேவை நிலையங்கள் ,மூன்று நூலகங்கள், வனவள அதிகாரி அலுவலகம், என பல அரச தனியார் திணைக்களங்கள் இருக்கும் நிலையில் அனைத்துக்கும் ஒருவரே கடிதங்களை விநியோகம் செய்து வருவதால் உரிய நேரத்திற்கு கடிதங்கள் கிடைப்பதில்லை என்பதுடன் பல தடவைகள் காலாவதியான கடிதங்களே எமது கைகளில் கிடைக்கின்றன.

பன்குடாவெளி மக்களின் முக்கிய கோரிக்கை! வீதிக்கிறங்கி கவனயீர்ப்பு | Main Demand Of The People Of Pangudavali

எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தபால் ஊழியர் ஒருவரை நியமித்து தருமாறு கேட்டுக் கொள்கின்றோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அநுர அரசாங்கம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.