இந்த ஆண்டுக்கான எதிர்பார்க்கப்பட்ட அனைத்து நிதி இலக்குகளையும் தாண்ட முடியும் என்று இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வரலாற்றில் இதுபோன்ற ஒன்று நடப்பது இதுவே முதல் முறை என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, வருவாய், செலவு, முதன்மை உபரி மற்றும் ஒட்டுமொத்த நிதி பற்றாக்குறை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அரசாங்கம் தனது நிதி இலக்குகளை அடைவதில் வாகன இறக்குமதியும் அவற்றிலிருந்து கிடைக்கும் வரி வருவாயும் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த பெப்ரவரியில் வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இலங்கை வாகன இறக்குமதிக்காக சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடக்கூடும் என்று மத்திய வங்கி கூறுகிறது.
இது ஆரம்பத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டது.










