நாளை முதல் இலவச பொலித்தீன் பைகளுக்கு தடை!

5 days ago

பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் பொலித்தீன் பைகளை இலவசமாக விநியோகிப்பது நாளை (நவம்பர் 1) முதல் தடைசெய்யப்படும் என்று நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) அறிவித்துள்ளது.

ஒக்டோபர் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பில், நுகர்வோருக்கு வழங்கப்படும் பில்கள் விற்பனையாளர்கள் ஷொப்பிங் பைகள் விலையைக் குறிப்பிடுவதை CAA கட்டாயமாக்கியது.

அந்த வர்த்தமானியில், அடர்த்தி குறைந்த பொலித்தீன், அடர்த்தி குறைந்த நேர்த்தியான பொலித்தீன் ஆகியவற்றில் உற்பத்தி பொருட்களை இலவசமாக வழங்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலித்தீன் பைக்கான விலை வியாபார நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நுவர்வோருக்கு பொலித்தீன் பைகளை வழங்குவதை இடைநிறுத்தி இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

blank