நடுவீதியில் காவல்துறையினருடன் முரண்பட்ட பெண்! தீயாய் பரவும் காணொளி

4 days ago

போக்குவரத்து விதிகளை மீறியதற்காக விசாரிக்கப்பட்ட பெண்ணொருவர் காவல்துறையினருடன் முரண்படும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

குறித்த சம்பவமானது, கம்பஹா - உடுகம்போல பகுதியில் பதிவாகியுள்ளது.

காவல்துறையினர் விசாரிக்கையில் கூச்சிலிட்ட பெண், தான் ஒரு குற்றமும் இழைக்க வில்லை என்றும் தன்னிடம் அனைத்து இருப்பதாக கூறியுள்ளார்.

அதன்போது, அப்பகுதி மக்களும் அங்கு கூடிய நிலையில், சம்பந்தப்பட்ட பெண் போக்குவரத்து விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டி கடும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, தன்னை ரன்மல் கொடித்துவக்குவவின் சகோதரி எனக் கூறிக்கொண்ட அவர், தனக்கு காவல்துறையினருடன் தீர்த்துக் கொள்ள பல பிரச்சினைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!