தொடரும் அதிரடி கைதுகள்..! வெலிகம கொலை துப்பாக்கிதாரியின் மனைவியும் கைது

1 week ago

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர், துப்பாக்கிதாரியின் மனைவி என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

லசந்த விக்ரமசேகர எனப்படும் “மிதிகம லசா” சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் துப்பாக்கிதாரியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் நேற்று (26.10.2025) குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் வெலிகம காவல்துறையினரால் கெக்கிராவையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

எனினும், துப்பாக்கிச சூட்டை மேற்கொண்ட துப்பாக்கதாரி காவல்துறையினருடன் சண்டையிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

ஒப்பந்தப் பணம்

இந்தக் கொலைக்காக கொலையாளிகள் பெற்ற ஒப்பந்தப் பணத்தின் ஒரு பகுதியான 12 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம், அவர்கள் மறைந்திருந்த கெக்கிராவ வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடரும் அதிரடி கைதுகள்..! வெலிகம கொலை துப்பாக்கிதாரியின் மனைவியும் கைது | Wife Weligama Murder Gunman Also Arrested

அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை (26.10.2025) குறித்த துப்பாக்கிதாரியும் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு பிரிவு தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கொலைக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருள் தொகை குறித்த சந்தேகநபர்களிடம் இருந்த பல பொருட்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.