தொடருந்துக் கடவையில் செயலிழந்துள்ள மின்குமிழ்! மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

1 week ago

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட சிராஜ் நகர் பிரதான வீதியில் இருந்து உட்செல்லும் தொடருந்துக் கடவையின் அருகாமையில் அமைந்துள்ள மின் கம்பத்தின் மின் குமிழ் பல நாட்களாக செயலிழந்த நிலையில் உள்ளது.

இந்த மின் விளக்கு பழுதடைந்ததனால், இரவு நேரங்களில் அந்த பகுதியில் முழுமையான இருள் நிலவுகிறது.


விபத்துக்கள் நிகழும் அபாயம்

குறிப்பாக புகையிரதங்கள் கடக்கும் நேரங்களில் அந்த கடவையை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் அபாயத்தை எதிர்நோக்க நேரிடும்.

தொடருந்துக் கடவையில் செயலிழந்துள்ள மின்குமிழ்! மக்கள் விடுத்துள்ள கோரிக்கை | Bulb Failure On An Pole Near A Railway Crossing

அத்துடன், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால், விபத்துக்கள் நிகழும் அபாயமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த கடவையின் அருகாமையில் உள்ள தெரு விளக்கை விரைவாக பழுது பார்த்து மீண்டும் ஒளிர செய்து பாதுகாப்பானதாக அமைத்து தருமாறு தம்பலகாமம் பிரதேச சபை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!