தொக்கி நிற்கும் குற்றச் செயல்கள்: நாட்டிலிருந்து தப்பிச் சென்ற முக்கிய சாட்சியங்கள்!

5 days ago

இலங்கையில் அண்மைய தினங்களாக நடைபெற்று வரும் குற்றச்செயல்களின் பின்னணியில் பாதாள உலகக் குழுக்களின் ஈடுபாடு அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் தான், குற்றச் செயல்களுக்கு துணை போகும் பல அரசியல் தலைமைகள் தொடர்பிலும், தற்போது தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன்னர் தகுதி, அந்தஸ்த்து பாராது குற்றம் புரிந்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்ற ஒரு வாக்குறுதியை வழங்கியிருந்தனர்.

அதனடிப்படையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு சில நடவடிக்கைகளும் அதற்கு ஏற்றாற் போலவே உள்ளது.

இதேவேளை, லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் இன்னுமும் எந்தவொரு தீர்வுகளும் வழங்கப்படவில்லை.

இவ்வாறு விடையறியா பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பல சாட்சியங்களும் நாட்டிலிருந்து தப்பிச் சென்று வேறு நாடுகளில் தஞ்சம் கோரி வாழ்ந்து வருகின்றனர். 

இவ்விடயங்கள் தொடர்பில் ஆராய்கிறது ஐபிசி தமிழின் உண்மைகள்............