35ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியின் வலைப்பந்தாட்ட போட்டிகளில் யாழ்ப்பாண மாவட்டம் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளன.
கம்பஹா, வட்டிப்பொல உள்ளக விளையாட்டரங்கில் இந்த இறுதிப்போட்டிகள் இடம்பெற்றன.
ஆண்களுக்கான இறுதி போட்டியில், இரத்தினபுரி அணியுடன் யாழ்ப்பாண அணி மோதியது.
இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளது
இந்தப் போட்டியில் 19இற்கு 18 எனும் புள்ளி அடிப்படையில் யாழ்ப்பாண அணி தோல்வியடைந்து இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

அதனைத் தொடர்ந்து குறித்த விளையாட்டரங்கில் பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றது.
குருநாகல் அணியுடன் மோதிய யாழ்ப்பாண அணி 41இற்கு 26 எனும் புள்ளி அடிப்படையில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!









