தென்சீனக்கடலில் ஒரே நாளில் நடந்த விபத்துக்களில் அமெரிக்கா தனது இரண்டு போர் விமானங்களை இழந்துள்ளது. இந்த விபத்தில் அமெரிக்கா கடற்படையின் உலங்கு வானூர்தி மற்றும் பசுபிக் கடற்படையின் தாக்குதல் விமானம் ஆகியவையே கடலில் வீழ்ந்துள்ளன.
இது தொடர்பில் அமெரிக்காவின் கடற் படை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு ள்ளதாவது, முதலில் விபத்துக்குள்ளானது வழக்க மான செயற்பாடுகளை மேற்கொண்ட MH-60RC ஹாக் ஹெலிகாப்டர் ஆகும். அதில் இருந்த அனைத்து படைவீரர்களும் மீட்கப்பட்டுள்ளனர். பின்னர் அமெரிக்காவின் முன்னணி விமானந்தாங்கி கப்பலான நிமிட்ஸ் விமானந்தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்ட ஒரு F/A-18 சூப்பர் ஹார்னெட் போர் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் இருந்த இரண்டு விமானிகளும் மீட்கப் பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபடட்டுள்ளனர். இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக அமெரிக் கா வின் பசுபிக் கடற்படை தலைமையகம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தென்சீனக் கடல் பிராந்தியத்தில் ஆண்டு தோறும் 3 றில்லியன் டொலர்கள் பெறுமதியான வர்த்தக நடைவடிக்கைகள் இடம்பெற்றுவருகின் றன. அதன் அடியில் பெருமளவான கனிமப் பொருட்களும், எரிபொருட்களும் புதைந்து கிடக் கின்றன. ஆனால் அதனை சுற்றி உள்ள நாடுக ளான வியட்னாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை சீனாவுக்கு எதிராக அமெரிக்கா களமிறக்கிவருவது டன், அவுஸ்திரேலியாவின் போர் விமானங்களும் அந்த பிராந்தியத்தில் அத்துமீறிய உள்நுழைவுகளை மேற்கொண்டு வருவதுண்டு. தாய்வான் பிரச்ச னையில் அமெரிக்கா முனைப்பாக நிற்பதற்கும் தென் சீனக்கடலே பிரதானமான காரணமாக உள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் கடற்படையினரும் இந்த கடல் பகுதியில் அடிக்கடி சுற்றுக்காவல் நடைவடிக்கைகளில் ஈடுபடுவது உண்டு. தற்போது அமெரிக்கா ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் மலேசியாவில் இடம்பெறும் ஆசியன் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்ப் சென்றிருந்த சமயம் அமெரிக்காவின் முக்கிய கவனப் புள்ளியான தென்சீனக்கடலில் இரண்டு விமானங்கள் திடீ ரெனெ வீழந்துள்ளன.
இந்த சம்பவத்தின் பாதிக்கப்பட்ட அமெரிக்க படையினருக்கு தாம் மனிதாபிமான உதவிகளை வழங்கவதற்கு தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோன ஜியாகுன் திங்களன்று தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த சந்தர்ப்பத்தில் யாரோ ஒருவர் உண்மையிலேயே எதையாவது மறைக்க முயற்சிப்பது போல் தெரிகிறது. அமெரிக்க இராணுவத்திற்கு ஒருபோதும் நடக்காத இரண்டு விபத்துக்கள் திடீரென்று ஒரே நாளில், சில மணி நேர இடைவெளியில் நிகழ்கின்றன. இது மிகவும் விசித்திரமான தற்செயல் நிகழ்வு.
சீனா அல்லது ரஸ்யா தற்போது குறிப் பிட்ட அமெரிக்க விமானம் மற்றும் கடற் படை கப்பல்கள் போன்றவற்றை குழப்பக் கூடிய உள்ளூர்மயமாக்கப்பட்ட நேரடி சமிக்கை EMP திறன்களைக் கொண்டுள்ளனவா? என்ற கேள்வி கள் எழுந்துள்ளன. இரண்டு விமானங்க ளும் சில மணிநேர இடைவெளியில் வீழ்ந்தது என்பது இது ஒரு சிறப்பு EMP அல்லது மின்னணுவியல் உபகரணங்களை ஹேக் செய்வது போல் தெரி கின்றது. இது தொடர்பில் அமெரிக்கா சந்தேகம் கொள்வதற்கும். ரஸ்யா மற்றும் சீனா ஆகியவற்றின் மௌனத்தை நம்பாமல் இருப்தற்கும் பல காரணங்கள் உண்டு.
ஆசியன் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அமெரிக்க அதிபர் சென்ற சமயம், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை ஏறத்தாழ 3 மணியளவில் ஹெலிகாப்டர் கடல்சார் தாக்குதல் படையின் (HSM) 73 இன் “பேட்டில் கேட்ஸ்” பிரிவிற்கு நியமிக்கப்பட்ட அமெரிக்க கடற்படை MH-60R சீ ஹாக் ஹெலிகாப்டர், விமானம் தாங்கி கப்பலான USS நிமிட்ஸ் (CVN 68) இலிருந்து வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டபோது தென் சீனக் கடல் நீரில் விழுந்தது.
விமானங்தாங்கி கப்பலின் கேரியர் ஸ்ட்ரைக் குழு 11 க்கு ஒதுக்கப்பட்ட தேடல் மற்றும் மீட்புப் படைகள் விமானத்தில் இருந்த மூன்று பணியாளர்களையும் பாதுகாப்பாக மீட்டன. இந்த சம்பவம் இடம்பெற்று 30 நிமிடங்களுக்குப் பிறகு, ஸ்ட்ரைக் ஃபைட்டர் படை (VFA) 22 இன் ‘ஃபைட்டிங் ரெட்காக்ஸ்’ பிரிவிற்கு நியமிக்கப்பட்ட F/A-18 சூப்பர் ஹார்னெட், USS நிமிட்ஸிலிருந்து வழக்கமான நடவடிக்கைகளின் போது தென் சீனக் கடலில் விழுந்தது.” விமானத்தில் இருந்த இரண்டு வான்படையினரும் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டனர்.
இது தற்செயலாக நிகழும் வாய்ப்பு குறைவு, நிமிட்ஸ் CSG அக்டோபர் 18 ஆம் நாள் ஜப்பானின் யோகோசுகாவுக்த் திரும்புவதற்கு முன்னர், அங்கிருந்து வெளியேறும் USS வொசிங்டனுடன் இது சிறிதுநேரம் இணைந்து நடைவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. இதனால் இந்தோ பசுபிக் கடற்பிராந்தியத்தில் நிமிட்ஸ் விமானந்தாங்கி கப்பலே தனித்து விடப்பட்டிருந்தது.
தென்சீனக்கடல் என்பது எப்போதும் ஒரு மோதல் புள்ளியாகவே உள்ளது. அங்கு சீனா தனது ரோந்துப் பணிகளை வலுப்படுத்தி வருகின்றது. ஸ்கார்பரோ ஷோல் அருகே டைப்-055 நாசகாரக் கப்பல்கள் மற்றும் H-6 குண்டுவீச்சு விமானங்களை அது நிறுத்தியுள்ளது. அதேசமயம், அங்கு பிலிப்பைன்ஸ் நாட்டு கடற்படைக் கப்பல் களும் நடைவடிக்கையில் ஈடுபடுவதுண்டு. சீன படைகளுக்கு அருகில் உள்ள பொதுவான களமுனையில் அமெரிக்காவின் இரண்டு தாக்குதல் விமானங்கள் வீழ்வது என்பது ஒரு விளையாட்டா னது அல்ல.
அதன் உண்மையான காரணம் படை அதிகாரிகளை தவிர யாருக்கும் தெரியப்போவ தில்லை. விமானங்கள் வீழ்ந்த காலப்பகுதி என்பது Trump மலேசியாவில் இருந்து ஜப்பானுக்கு சென்ற நேரத்தில் நிகழ்ந்துள்ளது. அதாவது ட்றம்ப்பிற்கு மிக அருகில் அமெரிக்காவின் இழப்பு நிகழ்ந் துள்ளது. இந்த அடுத்த பகுதி UTC அல்லது யுனிவர்சல் டைம் கோஆர்டினேஷனில் இருக்கும்.
வீழ்ந்த காலமும் ட்றம்ப்பின் பயணமும் ஒத்துப்போகின்றன. மதியம் 2:00 மணி ஜனாதிபதி ட்றம்ப் மலேசியாவை விட்டு வெளியேறுகிறார். பிற்பகல் 2:45 மணி ஜனாதிபதி ட்றம்ப் தென் சீனக் கடலில் நுழைகிறார், சீ ஹாக் ஹெலிகாப்டர் கீழே விழுகிறது. பிற்பகல் 3:15 மணி AF1 இல் உள்ள ஜனாதிபதி ட்றம்ப்பின் விமான கண்காணிப்பு அலைவரிசைகளை அணைக்கின்றது. அதே நேரத்தில்தான். F/A-18 கீழே விழுகிறது.
இங்கே ஏதோ இனம்புரியாத விடயங்கள் நிகழ்கின்றன என்பது மட்டும் உண்மை. ஆனால் அதனை இரு தரப்பும் மறைக்கின்றன. இந்த வருடத்தில் அமெரிக்கா இழந்த நான்காவது விமானம் இதுவாகும். ஒரு விமானத்தின் பெறுமதி 60 மில்லியன் டொலர்கள். விமானங்கள் தரம் குறைந்த எரிபொருள் காரணமாக வீழ்ந்ததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவ்வாறு அமெரிக்க விமானங்கள் வீழ்வதாக இருந்தால் அதன் படைத்துறையின் பராமரிப்பு திறன் குறைந்து வருவதையே காட்டுகின்றது. அதாவது அமெரிக்க ஆயுதங்கள் மீதான அவநம்பிக்கையை உலகில் இது ஏற்படுத்தலாம்.
மறுபுறமாக ரஸ்யா அணுசக்தியில் இயங் கும் ஏவுகணைகளையும், நீருக்கு அடியால் அணுக்குண்டுகளை சுமந்து செல்லும் ஆயுதங் களையும் வெற்றிகரமாக சோதித்து வருகையில் அமெரிக்க ஆயுதங்களின் பலவீனம் தற்போது மாறிவரும் உலக ஒழுங்கின் மாற்றத்தை மேலும் விரைவுபடுத்தலாம்.











