இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தின் இன்றிய மையாத தூணாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைத் திட்டம், அதன் இரண்டாவது நீடிக்கப்பட்ட சலுகைக் காலம் 2027இல் நிறைவடைவதை ஒட்டி, தற்போது தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது.
2005இல் முதன்முதலாக வழங்கப்பட்டு, பின்னர் 2010இல் நிறுத்தப்பட்டு, 2017இல் மீண் டும் பெறப்பட்ட இந்தச்சலுகை, அடுத்த தசாப் தத்திலும் தொடருமா இல்லையா என்பது இலங் கையின் பொருளாதார நிலைத்தன்மைக்கு மிக முக்கியமானதொரு காரணியாகும்.
ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை, இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு முக்கிய நிதியியல் காப்புக் கவசமாகச் செயற்படுகிறது. இதன்மூலம், மொத்த வரி விதிப்புப் பிரிவுகளில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான (66 வீதத்துக்கும் மேற்பட்ட) இலங்கை உற்பத்திப் பொருட்களை, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளுக்குச் சுங்க வரி இன்றி (வரியற்ற தீர்வையுடன்) ஏற்றுமதி செய்ய முடியும்.
இலங்கையின் மொத்த வருடாந்த ஏற்று மதி வருமானம் சராசரியாக 13-14 பில்லியன் டொலர்களாகும். இதில், ஆடைத்துறை மட்டும் 5 பில்லியனுக்கும் அதிகமான வருமானத்தைக் கொண்டு வருகிறது. அமெரிக்காவுக்கு அடுத்த படியாக இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக ஐரோப்பிய ஒன்றியம் திகழ்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மட்டும் வருடத்திற்குச் சுமார் 2.5 பில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருமானம் கிடைக்கிறது.
ஆடைகள், ரப்பர் பொருட்கள், மீன், மசாலாப் பொருட்கள் மற்றும் விவசாய விளை பொருட்கள் போன்ற முக்கிய துறைகள் தீர்வைகள் இல்லாத ஐரோப்பியச் சந்தை அணுகலை நம்பியுள்ளன. இதன்மூலம், இலங்கையின் உற்பத் திகள் போட்டியாளர்களை விடச் சிறந்த விலையில் ஐரோப்பிய நுகர்வோரை அடைய முடிகிறது.
இந்தச் சலுகையின் பலனை நேரடியா கவோ அல்லது மறைமுகமாகவோ நம்பி, சுமார் 2 மில்லியன் மக்கள் (இதில் 3-4 இலட்சம் பேர் ஆடைத்துறையில் நேரடியாகப் பணியாற்றுகின்ற னர்) தங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ளனர். இச்சலுகையை இழப்பது என்பது, இலங்கையின் தொழில்முனைவோருக்கும், உழைக்கும் வர்க்கத் திற்கும் ஈடுசெய்ய முடியாத பொருளாதாரத் தாக் கத்தை ஏற்படுத்தும்.
2027-க்குப் பிந்தைய ஜி.எஸ்.பி.பிளஸ் நீடிப்பைப் பெற, இலங்கை அரசாங்கம் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் விண்ணப்பிக்க வேண் டும். இதன் அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியம் சுமார் மூன்று ஆண்டுகள் விரிவான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள் ளும். இறுதியாக, 2029ஆம் ஆண்டளவில் தான் சலுகை நீடிக்கப்படுமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
2027முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி விதிமுறைகள், இலங்கைக்குக் கூடுதல் அழுத்தத்தை அளித்துள் ளன. இலங்கை தற்போதுள்ள 27சர்வதேசச் சாசனங் களுக்கு மேலதிகமாக, புதிய 6 சாசனங்களையும் (மொத்தம் 33 சாசனங்கள்) நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தை எதிர்நோக்குகிறது.
புதிதாக இணைக்கப்பட்டுள்ள நிபந்தனைக ளில் பருவநிலை மாற்றம், பாரிஸ் ஒப்பந்தம், சர்வதேசக் குற்றங்கள் மற்றும் குழந்தைத் தொழி லாளர் ஒழிப்பு போன்ற விடயங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன.
ஜி.எஸ்.பி.பிளஸ் இணக்கத்தில் ஐரோப் பிய ஒன்றியம் தொடர்ந்து வலியுறுத்தும் மிக முக்கியமான நிபந்தனை, இலங்கையின் சர்ச்சைக் குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது அல்லது சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு இணங்க முழுமையாக மாற்றியமைப்பதாகும். ஐரோப்பிய ஒன்றியம் இந்தச் சட்டத்தை ஒரு தீர்மானமான ‘சிவப்புக் கோடாக’ (Decisive Factor) முன்னிறுத்துகிறது.
இலங்கை அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறது. இருப்பினும், இச்சட்டம் வெறும் பெயரை மாற்றுவதாக இல்லாமல், அதன் உள்ளடக்கம் சுதந்திரம், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற் றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.
இச்சலுகை ஒரு வணிக ஒப்பந்தம் மட்டு மல்ல, அது அடிப்படை விழுமியங்களில் இணங்கு வதற்கான ஒப்பந்தம்’ என்று ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிடுகிறது. இதிலிருந்து அரசாங்கம், குறித்த உடன்பாடுகளில் காண்பிக்க வேண்டிய அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி நிற்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுக்கள் தொடர்ந்து இலங்கைக்குப் பயணம் செய்து, மனித உரிமைகள், தொழிலாளர் உரிமை கள், சிவில் சமூகத்தின் பங்கு மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட 27 சாசனங்களின் ‘நடைமுறைப்படுத்தலை’ மதிப்பீடு செய்கின்றன.
சலுகையைப் பெறுவதற்கான முழுப் பொறுப்பும் நிபந்தனைகளை திறம்பட நிறைவேற்றுவதில் இலங்கை அரசுக்கு உள்ளது என்பதை ஐரோப்பிய ஒன்றியம் தெளிவாக வலியுறுத்துகிறது. அவர்கள் ஒரே இரவில் மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்றாலும், இலங்கை அரசாங்கம் அந்த 33 நிபந்த னைகளை நிறைவேற்றுவதில் தொடர்ச்சியான, வெளிப்படையான முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அதன் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒருபுறம், ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையை இழப்பது இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை வெகு வாகக் குறைக்கும்; மறுபுறம், சர்வதேசச் சாசனங் களை நிறைவேற்றுவதற்கான உள்நாட்டு அரசியல் சவால்களும், சட்டரீதியான தடைகளும் உள்ளன.
குறிப்பாக அமெரிக்கா போன்ற முக்கிய சந்தைகள் வரி விதிப்புகளை அதிகரிப்பதாக அச் சுறுத்தும் இச்சூழலில், ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை இலங்கைக்கு ஒரு காப்புக் கவசமாக இருக்கிறது.
எனவே, இலங்கை அரசாங்கம் தனது கொள்கை நிலைப்பாடுகளுக்கும், சர்வதேச இணக் கத்திற்கான அழுத்தங்களுக்கும் இடையில் சரியான சமநிலையைக் காணவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.
ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையை இழப்ப தைத் தவிர்க்க வேண்டுமானால், வெறும் வாக்குறுதிக ளுக்கு அப்பால் சென்று, 33சர்வதேசச் சாசனங்களின் ‘திறம்பட்ட நடைமுறைப்படுத்தலை’ உறுதியாக வெளிப்படுத்த வேண்டும். இதுவே இலங்கையின் ஏற்றுமதி மற்றும் பொருளாதார எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரேவழியாகும்.
அவ்வாறான நிலையில், தற்போதைய தகவல்களின் பிரகாரம், எதிர்வரும், டிசம்பரில் இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐரோப்பிய ஒன்றியக் குழுவானது, புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தின் வரைபை பார்வையிடுவதற்கு ஆர்வ மாக உள்ளது.
அதேபோன்று, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகைக் கான நீடிப்பினை வழங்குவதில் இலங்கை அரசாங்கத்துக்கு பச்சைக்கொடி காண்பிக்கும் நிலைமைகள் காணப்படுகின்றன. ஆனால், புதிய உடன்பாடுகள் உட்பட தமது நிபந்த னைகள் அனைத்தையும் உள்ளீர்க்க வேண்டும் என்பதில் ஐரோப்பிய ஒன்றியம் கவனமாக இருக்கின்றது.
மேலும், பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதை தமிழ்த் தரப்புக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்ற நிலை யில் ஐரோப்பிய ஒன்றியம் தற்போது சர்வதேச தரங்களுடன் புதிய பயங்கரவாத தடைச்சட்டத் தினை அமுலாக்குவதற்கு எதிர்ப்பினை வெளி யிடப் போவதில்லை என்பது முக்கியமான விடய மாகின்றது.
ஆக, ஐரோப்பிய ஒன்றியம் தன்நலனி லின் உறுதியாக இருக்கின்ற நிலையில் பாதிக்கப் பட்ட தமிழ் மக்களும், அவர்களின் பிரதிநிதிகளும் எவ்வாறு அக்கட்டமைப்பை கையாளப் போகி ன்றார்கள் என்பது இங்கு எழுந்திருக்கும் பிரதான கேள்வியாகவுள்ளது.









