ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வி அமைச்சரின் அறிவிப்பு

2 days ago

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிப்பதால் எவ்வித பிரச்சனையும் தோன்றவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாம் இயன்றவரை கருத்தில் கொண்டுள்ளோம்.   

புதிய கல்விச் சீர்திருத்தம்

தற்போதைய கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டும். அந்த வகையில் நடைமுறைப்படுத்த உள்ள புதிய கல்விச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

 கல்வி அமைச்சரின் அறிவிப்பு | School Hours Should Be Extended Moe Sri Lanka

பிற்பகல் 2 மணி வரை பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு சாதகமான பதில்களே அதிகமாகக் கிடைத்துள்ளன என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

30 நிமிடங்கள் அதிகரிப்பு

இதேவேளை, தற்போது பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும் பாடசாலை நேரம், இந்த சீர்திருத்தத்தின் கீழ் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை (30 நிமிடங்கள் அதிகரிப்பு) நீட்டிக்கப்படவுள்ளது.

 கல்வி அமைச்சரின் அறிவிப்பு | School Hours Should Be Extended Moe Sri Lanka

தேசிய கல்வி நிறுவகத்தின் (National Institute of Education) பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் இதில் நிபுணர்கள் அல்ல என்றும், இந்தக் கல்விச் சீர்திருத்தங்களை தேசிய கல்வி நிறுவகம் மட்டுமே வடிவமைப்பதாகவும் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!