ஜகத் விதான குறித்து காவல்துறை மா அதிபரின் சர்ச்சைக்குரிய கருத்து : சஜித் தரப்பு கண்டனம்

1 week ago

களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு (Jagath Vithana) விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பில், அவருக்கு காவல்துறையினர் வழங்கிய பாதுகாப்பு குறித்து காவல்துறை மா அதிபர் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினருக்கு அச்சுறுத்தல்கள் அரசியல் அல்லாத காரணங்களுக்காக விடுக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை மா அதிபர் கருத்து தெரிவித்துள்ளார்.

குறித்த கருத்து நாடாளுமன்ற உறுப்பினர் வேறு ஏதேனும் சட்டவிரோத செயலில் அல்லது தனிப்பட்ட விடயங்களில் ஈடுபட்டதன் காரணமாகவே அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கலாம் என்ற உணர்வை அளிக்கின்றது.

காவல்துறை மா அதிபரின் பொறுப்பு

அது என்ன என்பதைச் சரியாக அறிவிப்பது காவல்துறை மா அதிபரின் பொறுப்பாகும், அவ்வாறு செய்யாமல் மறைமுகமாக அறிக்கைகளை வெளியிடுவது பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாகும் என்பதால் அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

 சஜித் தரப்பு கண்டனம் | Sjb Condemns Igp S Comments About Jagath Withana

இந்த அறிக்கையில் வெளிப்படுவது முறைப்பாட்டாளரையும், பாதிக்கப்பட்டவரையும் குற்றவாளியாக மாற்றும் முயற்சியாகும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

தற்போது அரசாங்கம் செய்வது அனைத்து நிகழ்வுகளும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக அல்லது தொடர்புகள் காரணமாக நடந்ததாகக் கூறி சம்பவத்தை குறைத்து மதிப்பிடுவதாகும்.

காவல்துறை ஆணைக்குழு

அரசாங்கத்தின் பிரச்சார திட்டத்திற்கு ஏற்ப காவல்துறை மா அதிபரின் அறிக்கைகள் சுதந்திரமான காவல்துறையின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குவதாகும்.

சுயாதீன காவல்துறை ஆணைக்குழுவின் அதிகாரங்களை காவல்துறை மா அதிபருக்கு வழங்கி, காவல்துறை மா அதிபர் நினைத்தபடி அறிக்கைகளை வெளியிட்டு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளில் நாடு அடக்குமுறை காவல்துறை அதிகார இருளின் நிழலாகவே நாங்கள் காண்கிறோம்.

 சஜித் தரப்பு கண்டனம் | Sjb Condemns Igp S Comments About Jagath Withana

இந்த ஆபத்து அனைத்து ஜனநாயக அரசியல் நீரோட்டங்களில் ஈடுபடும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.

சந்தேக நபர்களைக் கைது செய்வதை ஊடக சந்திப்பாக மாற்றும் காவல்துறை நடவடிக்கைகள் மூலம் உண்மையான கேள்விகளை மறைக்க எடுக்கும் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியான ஜகத் விதான நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானத்தை குறைத்து மதிப்பிடுவதற்கு எதிராக நாங்கள் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

Gallery