சுன்னாகம் காவல்துறை உத்தியோகத்தர் இருவர் அதிரடியாக பணியிடை நீக்கம்!

2 days ago

சுன்னாகம் காவல் நிலைய காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவர் இன்றையதினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் திலக் தனபால இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நால்வர் ஹெரோயினுடன் சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டடனர்.

  கைதி தப்பியோட்டம்

இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். பின்னர் பிரதான சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய காவல்துறையினர் அனுமதி கோரிய நிலையில் மன்றும் அதற்கு அனுமதி வழங்கியது.

சுன்னாகம் காவல்துறை உத்தியோகத்தர் இருவர் அதிரடியாக பணியிடை நீக்கம்! | Two Chunnakam Police Officers Suspended

தடுப்புகாவல் விசாரணையின் பின்னர் குறித்த சந்தேகநபரை நேற்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றவேளை சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு காவல்துறை உத்தியோகத்தர் பணியிடை நீக்கம்

இந்நிலையில் அந்த சம்பவத்தின்போது கடமையில் இருந்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் இன்றையதினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

சுன்னாகம் காவல்துறை உத்தியோகத்தர் இருவர் அதிரடியாக பணியிடை நீக்கம்! | Two Chunnakam Police Officers Suspended

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!