சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய இளம் குடும்பஸ்தர்

4 days ago

சவுதி அரேபியாவில் இந்தியாவை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சுட்டுக் கொல்லப்பட்டமை அவரது குடும்பத்தை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டம் துதாபானியா கிராமத்தை சேர்ந்தவிஜய் குமார் மஹதோ, (27) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.

09 மாதங்களுக்கு முன் சென்ற குடும்பஸ்தர்

இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியா சென்றார்.ஜெட்டா நகரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய இளம் குடும்பஸ்தர் | Indian Man Dies In Crossfire In Saudi

 இந்நிலையில் சவுதி அரேபியாவில் காவல்துறைக்கும் மதுபானம் கடத்தல் கும்பலுக்கும் இடையே நடந்த மோதிலில் அவ்வழியாக சென்ற இவர் மீது தவறுதலாக துப்பாகி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தவறுதலாக பாய்ந்த குண்டு

உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விஜய் குமார் மஹதோ உயிரிழந்தார்.

சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய இளம் குடும்பஸ்தர் | Indian Man Dies In Crossfire In Saudi

அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வரவும், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!