ஹொரனவின் மீவனபலான பகுதியில் இன்று இரவு(02) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தனிப்பட்ட தகராறு காரணமாக 12 போர் துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.










