பத்தேகம – சந்தராவல பகுதியில் இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலமொன்று மீட்க்கப்பட்டதாக பத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்தேகம, சந்தராவல பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண் ஒரு மின்சாதனக் கடையின் மேல் மாடியில் தனியாக வசித்து வந்ததாகவும், அவர் எப்போது கொலை செய்யப்பட்டார் என்பதை சரியாகக் கூற முடியாது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (26) இரவு மேல் மாடிக்குச் சென்ற அயலவர்கள் குழு ஒன்று அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பெண்ணின் கொலை குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.










