கொத்து கொத்தான முடி வளர்ச்சி வேணுமா: இதோ ஒரே தீர்வு!

6 days ago

Hair Growth Beauty Life Style

By Shalini Balachandran Oct 30, 2025 08:11 PM GMT

Shalini Balachandran

Shalini Balachandran

in அழகு

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.

இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

 01. கற்றாழை
  1. முதலில் ஒரு கற்றாழையின் ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின் அதை உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
  3. பின்பு அதை அரை மணி நேரம் அப்படியே ஊற வைத்து பிறகு மென்மையான ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும்.
  4. கற்றாழை மயிர்கால்களை வலுப்படுத்தி முடி மெலிவதைக் குறைத்து முடி அடர்த்தியாகவும் வலுவாகவும் வளர்வதை உறுதி செய்கின்றது.

 இதோ ஒரே தீர்வு! | Best Ayurvedic Hair Growth Oil For Thick Hair

02. வெந்தயம்
  1. முதலில் வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும்.
  2. மறுநாள் காலையில் இதை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்பு அதை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும்.
  4. வெந்தயத்தில் உள்ள லிசித்தின் என்னும் பொருள் முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தவும் மற்றும் முடி உடைவதை தடுக்கவும் உதவுகின்றது.  
 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha