கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு! ஐந்து நடிகைகளிடம் பதிவு செய்யப்பட்டது வாக்குமூலம்

5 days ago

கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து நடிகைகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நடிகைகள் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று(31) நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நடிகைகள், வெளிநாடுகளுக்குச் சென்று கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்புகளை கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.


சட்டவிரோத நடவடிக்கைகள்

அதன்படி, பத்மேவுடன் தொடர்பு கொண்டு இந்த நடிகைகள் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பணமோசடி அல்லது ஆயுதங்கள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டார்களா என்பதைக் கண்டறிய மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக CID தெரிவித்துள்ளது.

கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு! ஐந்து நடிகைகளிடம் பதிவு செய்யப்பட்டது வாக்குமூலம் | Statement Record Five Actresses Affair With Padme

முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 7 ஆம் திகதி விசாரணைகளின் முன்னேற்றத்தை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் CIDக்கு உத்தரவிட்டுள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!