கெஹல்பத்தர பத்மேவிடமிருந்து துப்பாக்கி வாங்கிய வர்த்தகர் சிக்கினார்!

4 days ago

கெஹல்பத்தர பத்மேவிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்றை வாங்கிய மினுவாங்கொடையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் குறித்த கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினர், நடத்திய சோதனையின் போதே கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கெஹல்பத்தர பத்மே மினுவாங்கொடையில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு கைத்துப்பாக்கி ஒன்றை விற்பனை செய்ததாக மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி லின்டன் த சில்வாவுக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.


மூன்றரை இலட்சத்துக்கு துப்பாக்கி

அதனைதொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வர்த்தகரின் மினுவாங்கொடை இல்லத்தை பரிசோதனை செய்த போது கைத்துப்பாக்கி ஒன்றும் 13 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கெஹல்பத்தர பத்மேவிடமிருந்து துப்பாக்கி வாங்கிய வர்த்தகர் சிக்கினார்! | Businessman Arrested Purchasing A Gun From Padme

விசாரணையில், ஈநெட்டியா' என்பவரால் தனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக அந்த வர்த்தகர் பத்மேவுக்கு தெரிவித்து, மூன்றரை இலட்சம் ரூபாய்க்கு குறித்த துப்பாக்கியை வாங்கியதாக கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பெமேல் மாகாண வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!