கிளிநொச்சி, ராமநாதபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான எதிர்ப்பு நடவடிக்கையின் போது பொலிஸ் விசேட அதிகாரிகளுடன் ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
05 ஆண்களும், 05 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோத மதுபான உற்பத்தி அல்லது விநியோகத்தில் ஈடுபட்ட ஒரு சந்தேக நபரை அதிகாரிகள் கைது செய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. குடியிருப்பாளர்கள் குழு தலையிட்டு அதிகாரிகளைத் தாக்கி, சந்தேக நபரை வலுக்கட்டாயமாக விடுவித்ததாகவும், பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 16 முதல் 45 வயதுக்குட்பட்ட இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









