காஸாவில் (Gaza) எஞ்சிய பிணைக் கைதிகள் உடல்களைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் (United States) மத்தியஸ்தம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி இஸ்ரேலில் (Israel) இருந்து சிறைப்பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகள் மற்றும் அவர்களுள் இப்போது உயிரிழந்தவர்களின் உடல்களை, இஸ்ரேலிடம் ஒப்படைக்க ஹமாஸ் நிர்பந்தத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இதுவரை 18 பிணைக் கைதிகள் உடல்கள் ஹமாஸிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மறுபுறம் இஸ்ரேலிலிருந்து 195 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிணைக் கைதிகள்
இதனுடன், எஞ்சிய பிணைக் கைதிகள் உடல்களை அடுத்த 48 மணி நேரத்துக்குள் ஒப்படைக்க ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) காலக்கெடு விதித்துள்ளார்.

இதையடுத்து, காஸாவில் அனைத்துப் பகுதிகளிலும் இன்று (26) தேடுதல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
நிபுணர் குழு
இதற்காக எகிப்திலிருந்து நிபுணர் குழுவும் காஸா சென்றடைந்துள்ளது.

இந்தநிலையில், அவர்கள் புல்டோசர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் உதவியுடன் உடல்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









