கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள்!

1 week ago

கிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதைய அதிபர் ஓய்வு வயதையும் தாண்டி கடமையாற்றுகின்ற நிலையில் துடிப்புடன் செயற்பட்ட உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமையானது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே இந்த இடமற்றத்தால் மாணர்களின் நலன் பாதிக்கும் எனவும் இடம்மாற்றத்தை இரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

blank blank blank

Related