கலக்கத்தில் காவல்துறை பொறுப்பதிகாரிகள் : வடக்கு உட்பட பல அதிகாரிகளுக்கு அதிரடி இடமாற்றம்

3 days ago

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாறவுள்ளதாக காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யூடியூப் ஊடகவியலாளர்களை தொடர்பு கொண்டு காவல்துறை மா அதிபருக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்ததாக கூறப்படும் மூத்த காவல்துறை அதிகாரி மீது விசாரணைகள் தொடங்கப்பட்டவுடன், இந்த மூத்த அதிகாரிகளின் இடமாற்றங்கள் நடைபெறும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

லலித் பத்திநாயக்க

அதன்படி, நிர்வாகத்திற்கான காவல் துறையின் மூத்த டிஐஜியாக பணியாற்றி வந்த லலித் பத்திநாயக்க, அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 வடக்கு உட்பட பல அதிகாரிகளுக்கு அதிரடி இடமாற்றம் | Police Bigwigs Are Shaking Up

 மூத்த டிஐஜி சஞ்சீவ தர்மரத்ன, காவல் நிர்வாகப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சஞ்சீவ மெதவத்த, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான புதிய மூத்த டிஐஜியாக நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 திலக் தனபால

மேலும், வடக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டிஐஜி திலக் தனபால, வட மத்திய மாகாணத்திற்கும், மூத்த டிஐஜி புத்திக சிறிவர்தன, வட மாகாணத்திற்கும் மாற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 வடக்கு உட்பட பல அதிகாரிகளுக்கு அதிரடி இடமாற்றம் | Police Bigwigs Are Shaking Up

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!