கனடா இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி: ட்ரம்ப் அதிரடி

1 week ago

கனடா (Canada) இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கூடுதலாக பத்து சதவீதம் வரி விதித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால், கனடாவிற்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து வெளியான விளம்பரத்தின் எதிரொலியாக இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதீத வரியை டொனால்ட் ட்ரம்ப் விதித்தார்.

வரி கொள்கை

இதையடுத்து, கனடாவின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்றான ஒன்டாரியோ மாகாணம், அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால் கனடாவிற்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து அமெரிக்க மக்களுக்கு எடுத்துச் சொல்கின்ற வகையில் விளம்பரமொன்றை வெளியிட்டது.

 ட்ரம்ப் அதிரடி | Trump Raises Tariffs On Canada Ad Controversy

மொத்தம் 60 வினாடிகள் உள்ள இந்த விளம்பரத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், 1987 ஆம் ஆண்டு அந்நாட்டு தேசிய வானொலியில் பேசிய உரைகளில் இருந்து சில பகுதிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

அறக்கட்டளை எதிர்ப்பு

இதற்கு ரொனால்ட் ரீகன் அறக்கட்டளை எதிர்ப்பு தெரிவித்ததுடன், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. இதையடுத்து டொனால்ட் ட்ரம்ப், கனடாவுடன் நடத்தி வந்த வர்த்தக பேச்சுகள் அனைத்தும் முடிவுக்கு வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், சர்ச்சைக்குரிய விளம்பரத்தை நாளை முதல் நிறுத்தப் போவதாக அம்மாகாண முதல்வர் டக் போர்டு தெரிவித்துள்ளார்.

பேச்சு வார்த்தை

இது தொடர்பில் டொனால்ட் டர்ம்ப் இன்று (26) பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

 ட்ரம்ப் அதிரடி | Trump Raises Tariffs On Canada Ad Controversy

குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “உண்மைகளை அவர்கள் கடுமையாக தவறாக சித்தரித்ததாலும் மற்றும் விரோதமான செயலாலும் கனடா மீதான வரியை அவர்கள் இப்போது செலுத்துவதை விட பத்து சதவீதம் அதிகமாக உயர்த்துகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

கனடா உடன் அனைத்து வர்த்தக பேச்சு வார்த்தைகளையும் முடித்து கொண்ட சில நாட்களுக்கு பிறகு இந்த முடிவை டொனால்ட் டர்ம்ப் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!