கட்டுநாயக்காவில் சிக்கிய இந்திய பிரஜை

1 week ago

3 கோடியே 40 லட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 32 வயதான இந்தியப் பிரஜை என தெரியவந்துள்ளது.

தடுப்பு காவல் உத்தரவு

இந்த நபர் நேற்று (26) மாலை 04.15 மணிளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL-315 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

கட்டுநாயக்காவில் சிக்கிய இந்திய பிரஜை | Indian Arrested At Colombo International Airport

அவரிடமிருந்து 02 கிலோ 832 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் தொகை கொழும்பின் பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள ஹோட்டலில் உள்ளூர் போதைப்பொருள் முகவர்களிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை இன்று (27) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தடுப்பு காவல் உத்தரவு பெறப்படவுள்ளது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!