ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மட்டக்களப்பில் போராட்டம்!

4 days ago

ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் இன்றையதினம் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் இன்று (1) குறித்த போராட்டத்தை ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் சமத்துவமான ஓய்வூதியம் வேண்டும், ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் 28 வருடங்கள் கடந்துள்ளன, ஓய்வூதிய முரண்பாட்டை தீர்க்க அரசிடம் நீதி கோருவோம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றையதினம் பிரதமர் ஹரிணி அமரசூரிய மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.