ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சமபோஷ கைது

2 days ago

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation Crime

By Thulsi Nov 03, 2025 07:46 AM GMT

Thulsi

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான சமபோஷ என்ற மதுசங்க என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து சந்தேகநபரை கொழும்பு (Colombo) வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஐந்து கொலை

சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘வெல்லே சாரங்கா’ என்ற கமகே சாரங்கா பிரதீப்பின் நெருங்கிய கூட்டாளி என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சமபோஷ கைது | Organized Criminal Samaposha Arrested In Colombo

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் இருந்து 26 கிராம் 890 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ஐந்து கொலைகளுடன் தொடர்புடையவர் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha