எகிறும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்...! அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

1 week ago

எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஒரு முறையான திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என தேசிய நுகர்வோர் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

ஆங்கில ஊடகமொன்றுக்குக் கருத்து தெரிவித்த போதே தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருட்களின் விலைகள்

அவர் மேலும் கூறுகையில்,  அத்துடன் அரசாங்கம் அரிசி, மரக்கறிகள், சீனி, பருப்பு, மற்றும் மா போன்ற அத்தியாவசியப் பொருட்களை அடையாளம் கண்டு, பண்டிகைக் காலம் முழுவதும் அவற்றின் விலைகள் நிலையாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எகிறும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்...! அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Essential Goods Price In Sri Lanka Today

"ஏற்கனவே குறித்த பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

பண்டிகைக் காலத்திற்காக வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு எந்தத் திட்டத்தையும் வைத்திருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் உடனடியாக திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.  

அரிசி பற்றாக்குறை

இதேவேளை, உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கீரி சம்பா அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, 3,500 மெட்ரிக் டொன் பொன்னி சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

எகிறும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்...! அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Essential Goods Price In Sri Lanka Today

அதன்படி, அதன் முதல் தொகுதி கடந்த 23 ஆம் திகதி நாட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா அரிசியின் மற்றுமொரு தொகுதி கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.  

[KCUM86B ]

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!