உலகின் அதிவேக புல்லட் தொடருந்து: சீனா படைத்துள்ள சாதனை

1 week ago

உலகின் அதிவேக புல்லட் தொடருந்தின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி சீனா (China) புதிய சாதனை படைத்துள்ளது.

போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய ஆசிய நாடுகளான சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்டவை அதிவேக புல்லட் தொடருந்துகளை இயக்கி வருகின்றன.

ஜப்பானின் (Japan) எல்.ஓ சீரிஸ் மாக்லேவ் தொடருந்து, மணிக்கு 603 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்து சாதனை படைத்திருந்தது.

பெரிய மாற்றங்கள்

இதனை முறியடிக்கும் வகையில், மணிக்கு 896 கிலோ மீற்றர் வேகத்தில் இயங்கக்கூடிய சி.ஆர் 450 என பெயரிடப்பட்ட தொடருந்தை சீனா உருவாக்கியுள்ளது.

 சீனா படைத்துள்ள சாதனை | China Tests World S Fastest Bullet Train Cr 450

குறித்த தொடருந்து சீனாவின், ஷாங்காய் - செங்டு வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.

சி.ஆர் 450 புல்லட் தொடருந்து தொழில்நுட்ப ரீதியில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேற்கூரை உயரம் 

தொடருந்து எஞ்சினின் முனைப் பகுதி பருந்து அலகு போன்ற ஏரோடைனமிக் வடிவத்தில் 45 அடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 சீனா படைத்துள்ள சாதனை | China Tests World S Fastest Bullet Train Cr 450

வேகத்தை மேம்படுத்த, தொடருந்தின் ஒட்டுமொத்த காற்று எதிர்ப்பை 22 சதவீதம் குறைத்துள்ளனர்.

20 சென்ட்டிமீட்டர் அளவுக்கு தொடருந்தின் மேற்கூரை உயரம் குறைக்கப்பட்டுள்ளது.

தொடருந்து சோதனை

அத்துடன், முந்தைய மாடலான சி.ஆர் 400 காட்டிலும் 55 டன்கள் எடை குறைவானதுடன் இந்த தொடருந்து வெறும் நான்கு நிமிடங்கள் 40 வினாடிகளில் 350 கிலோ மீற்றர் வேகத்தை எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எதிரெதிர் திசையில் இரண்டு சி.ஆர் 450 புல்லட் தொடருந்துகளை சோதனை செய்தபோது, தொடருந்தின் வேகம் மணிக்கு 896 கிலோமீட்டராக இருந்துள்ளது.

 சீனா படைத்துள்ள சாதனை | China Tests World S Fastest Bullet Train Cr 450

இருப்பினும், வணிக ரீதியாக 400 கிலோ மீற்றர் மட்டுமே தொடருந்து இயக்கப்பட உள்ளது.

பொறியியல் ஆய்வு மற்றும் பாதுகாப்பு அனுமதி இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில், சோதனை ஓட்டத்திற்கு பின் சி.ஆர் 450 தொடருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!