உலகத்தை வியப்பில் ஆழ்த்திய அமெரிக்காவின் புதிய போர் விமானம்

6 days ago

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய போர் விமானமொன்றை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவில் இயங்கி வரும் தனியார் நிறுவனமொன்று இந்த விமானத்தை உருவாக்கியுள்ளது.

இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய உலகின் முதல் போர் விமானம் என தெரிவிக்கப்படுகின்றது.

தொழில்நுட்பத் துறை

இதன் மூலம் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு புரட்சிகரமான முன்னேற்றத்தை அமெரிக்கா அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகத்தை வியப்பில் ஆழ்த்திய அமெரிக்காவின் புதிய போர் விமானம் | The World S First Ai Fighter Jet

குறித்த போர் விமானத்திற்கு XQ-58A Valkyrie என பெயரிடப்பட்டுள்ளது. இந்த போர் விமானம், விமானி இல்லாமல் இயங்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வெறும் ட்ரோன் (Drone) போலல்லாமல், ஒரு போர் விமானத்திற்குரிய அதிநவீன செயல்பாடுகளைச் செய்யக்கூடியது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவத் திறன்

வழக்கமான விமான நிலையங்களில் ஓடுதளம் என்பது அத்தியாவசியத் தேவையாக காணப்படுகின்ற நிலையில், இந்த போர் விமானத்திற்கு ஓடுதளம் அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்தை வியப்பில் ஆழ்த்திய அமெரிக்காவின் புதிய போர் விமானம் | The World S First Ai Fighter Jet

இந்த போர் விமானமானது அமெரிக்காவின் இராணுவத் திறனை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் நம்பப்படுகின்றது.

இது மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு நிறுவனங்களுக்கு செயற்கை நுண்ணறிவிலான போர்க் கருவிகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு புதிய வழிகாட்டியாக அமெரிக்காவின் இந்த போர் விமானத்தை அமையும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!