உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

2 days ago

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சையை நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு பரீட்சை எழுத மொத்தம் 340,525 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இதில் 246,521 பேர் பாடசாலை மாணவர்களும் 94,004 பேர் தனியார் மாணவர்களும் ஆவர்.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து பயிற்சி வகுப்புகளையும் நடத்துதல், சிறப்பு கருத்தரங்குகளை நடத்துதல், விரிவுரைகள் மற்றும் பட்டறைகளை நடத்துதல் மற்றும் மாதிரி வினாத்தாள்களைப் பற்றி விவாதித்தல் உள்ளிட்ட பரீட்சை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நாளை (04) நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும்.

அனைத்து பரீட்சார்த்திகளுக்குமான அனுமதி அட்டைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும், அது கிடைக்காதவர்கள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் வலைத்தளத்தை அணுகலாம் என்றும் அவர் கூறினார்.