அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (27) மேலும் சரிந்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 299.98 ரூபாவாகவும், 307.51 ரூபாவாகவும் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழைமை (24) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 307.32 ரூபாவாகவும், 299.81 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
வளைகுடா நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாயும் மதிப்பு இன்று குறைந்துள்ளது.











