ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்! மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றின் தீர்ப்பு

1 week ago

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதற்கு எதிராக, தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாதிரியார் சிரில் காமினி, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனிப்பட்ட ரீதியில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.


தீர்ப்பு ஒத்திவைப்பு

இந்த நிலையில், குறித்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட மனுவை தாக்கல் செய்திருந்தார்.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்! மைத்திரியின் மனுவுக்கு நீதிமன்றின் தீர்ப்பு | Petition Postponed Filed Maithripala

இந்த மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.

விசாரணை இன்று (27) முடிவடைந்த பின்னர், தீர்ப்பை அறிவிப்பதை அமர்வு ஒத்திவைத்துள்ளது.

[CVTIA4A

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!