அரச வேலைக்கு காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

2 days ago

அரச வேலைக்காக 60,000 ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்த்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன (Chandana Abayarathna ) தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சேர்ப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

முதல் கட்டமாக, நாடு தழுவிய சேவைகளுக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. பொது சேவைக்கான ஆட்சேர்ப்பு முறையான நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சந்தன அபேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.   

அமைச்சரவை அனுமதி 

இதேவேளை, இலங்கையிலுள்ள பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள 8,547 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரச வேலைக்கு காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Good News Government Job Vacancies In Sri Lanka

பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை இவ்வாறு ஒப்புதல் அளித்துள்ளது.

அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் செயன்முறையை மீளாய்வு செய்வதன் மூலம் தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் காலக்கெடு ஆகியவற்றை இனங்கண்டு, அத்தியாவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆட்சேர்ப்பு அளவுகள் குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு கடந்த ஆண்டு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.  

இதில் அதிகபட்சமாக, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் கீழ் 5,198 வெற்றிடங்கள் (காவல்துறை ஆட்சேர்ப்புக்கள் உட்பட) நிரப்பப்படவுள்ளன.

இதைத் தொடர்ந்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு (1,261), மேல் மாகாண சபை (414), இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சு (355), மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு (310) ஆகியவற்றிலும் கணிசமான எண்ணிக்கையிலான ஆட்சேர்ப்புக்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!