அம்பாறையில் சொந்த சகோதரனை 4 வருடங்களாக வன்புணர்வுக்கு உட்படுத்திய சகோதரி கர்ப்பம்

2 hours ago

கூடப்பிறந்த தனது தம்பியை அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்த யுவதி கர்ப்பமடைந்த நிலையில் , குறித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

அம்பாறை , சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 22 வயது யுவதி வயிற்று வலி காரணமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற நிலையில் , மருத்துவ சிகிச்சையின் போது, யுவதி கர்ப்பமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. 

அதனை அடுத்து யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கர்ப்பத்திற்கு கூட பிறந்த தம்பியே காரணம் என தெரிவித்துள்ளார். 

அந்நிலையில் ,  15 வயதுடைய தம்பியை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்திய போது நான்கு வருடங்களுக்கு முன்னர் தனக்கு 11 வயதாக இருக்கும் போதே , 18 வயதான அக்கா , தன்னை அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் , அதனை தொடர்ந்து நான்கு வருடங்களாக அவ்வாறு தான் சகோதரியினால் பலாத்காரம் செய்யப்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். 

அதனை அடுத்து சகோதரர்களான 18 வயது இளைஞனையும், 22 வயதான யுவதியையும் கைது செய்து சட்ட வைத்திய அதிகாரியின் முன் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.