அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டிகருக்கு வெளியான அறிவிப்பு

6 days ago

அமெரிக்காவில் பணியாற்ற உரிமம் பெற்றுள்ள வெளிநாட்டினருக்கு அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில், குறித்த உரிமத்தை புதுப்பிக்கும் முன்பு அவர்கள் முழுமையான மறு ஆய்வுக்கு உள்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

பணி உரிமம் 

இதன் மூலம், ஜோ பைடனின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினரின் பணி உரிமம் தானாக புதுப்பிக்கப்படும் விதிமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டிகருக்கு வெளியான அறிவிப்பு | Empolyment Work Permit In The United States

இது அமெரிக்காவில் பணியாற்றும் எண்ணற்ற வெளிநாட்டினரை குறிப்பாக அதில் பெரும்பகுதியினராக இருக்கும் இந்தியர்களை வெகுவாக பாதிக்கும் என்று அஞ்சப்படுகின்றது.

இது தொடர்பாக, அமெரிக்க உள்துறை அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிப்பவர்கள்

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2025 ஒக்டோபர் 30 அன்று முதல் தங்கள் பணி உரிம அனுமதியைப் புதுப்பிக்க தாக்கல் செய்யும் வெளிநாட்டினர்களின் (ஏலியன்ஸ்) பணி உரிமம் இனி தானாக நீட்டிப்பு செய்யப்படாது.

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டிகருக்கு வெளியான அறிவிப்பு | Empolyment Work Permit In The United States

புதிய விதிமுறையில் பணி உரிமம் நீட்டிக்கக் கோரி விண்ணப்பிப்பவர்கள், மறு ஆய்வுக்கு உள்படுத்தப்படுவது நாட்டு மக்கள் நலனுக்காகவும் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்காகவும் மேற்கொள்ளப்படுகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விதிமுறையில் ஒரு சில விதிவிலக்குகள் உள்ளதாகவும் நாட்டின் சட்டம் மற்றும் பெடரல் பதிவுத் துறையால் உரிமம் பெற்றவர்களுக்கு மட்டும் இந்த விதிவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!