அமெரிக்க H-1B விசாவினால் பாரிய சிக்கலில் அமெரிக்கர்கள்!

5 days ago

அமெரிக்காவில் எச்1 பி விசாவை பயன்படுத்தி அமெரிக்கர்களின் கனவுகளை வெளிநாட்டினர் திருடி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையை அமெரிக்க தொழிலாளர் துறை விடுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றதில் இருந்து, எச்1 பி விசா மற்றும் குடியேற்ற விதிகளில் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகின்றார்.

பணி உரிமம்

இதன் தொடர்ச்சியாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பணி உரிமத்தை தானாக புதுப்பிப்பதை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

அமெரிக்க H-1B விசாவினால் பாரிய சிக்கலில் அமெரிக்கர்கள்! | Us Warns Of Foreign Workers Misusing H1B Visas

இந்தநிலையில், இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் (29) இரவு வெளியிடப்பட்டு, உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் அமெரிக்க தொழிலாளர் துறை காணொளி ஒன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளது.

அமெரிக்கர்கள் தேர்வு 

இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எந்தெந்த நாடுகளுக்கு எச்1பி விசா அ திகம் வழங்கப்படுகிறது என்பதுடன் இந்தியர்களுக்கு 72 சதவீத விசா வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு, அமெரிக்க மக்களிடம் இருந்து அமெரிக்க கனவுகள் திருடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க H-1B விசாவினால் பாரிய சிக்கலில் அமெரிக்கர்கள்! | Us Warns Of Foreign Workers Misusing H1B Visas

அரசியல்வாதிகளுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் எச்1 பி விசாவை தவறாக பயன்படுத்த அனுமதித்ததால் பல இளம் அமெரிக்கர்களின் கனவை வெளிநாட்டு தொழிலாளர்கள் திருடியுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தால் எச்1பி விசா தவறாக பயன்படுத்தப்படுவதற்கு நிறுவனங்கள் பொறுப்பாக்கப்பட்டுள்ளன எனவும் அந்த நிறுவனங்கள் அமெரிக்கர்களை தேர்வு செய்ய முன்னுரிமை அளிப்பதை டொனால்ட் ட்ரம்ப் உறுதி செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!