13 நாட்கள் கடலில் தவித்த 4 மீனவர்கள் ஹம்பாந்தோட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்!

5 days ago

தேவேந்திரமுனையில் இருந்து கடலுக்குச் சென்று 13 நாட்கள் கடலில் சிக்கித் தவித்த நான்கு மீனவர்களும் இன்று (31) அதிகாலை 5 மணியளவில் இலங்கை கடற்படையினரால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மீண்டும் அழைத்து வரப்பட்டனர்.

தேவேந்திர மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி ஆறு மீனவர்களுடன் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலின் தொடர்பு இணைப்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, கப்பல் காணாமல் போனது.

மேலும் கப்பலையும் அதில் உள்ள மீனவர்களையும் கண்டுபிடிக்க உதவிமாரு, கடற்படை தலைமையகத்தில் அமைந்துள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களம் தகவல் தெரிவித்தது. 

இந்த அறிவிப்புக்கு உடனடியாக பதிலளித்த கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினால், இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன்படி, பல நாள் மீன்பிடிக் கப்பலான கேஷான் புதா 1, இலங்கை கடற்கரையிலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு தெற்கே சுமார் 354 கடல் மைல்கள் (655 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் கவிழ்ந்து ஆபத்தில் இருந்தபோது, நான்கு (04) மீனவர்கள் இந்தோனேசிய மீன்பிடிக் கப்பலால் மீட்கப்பட்ட பின், அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படைத் தேவைகளை வழங்கவும் மீனவர்கள் வணிகக் கப்பலான MV Graceful Star அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

மேலும், பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், இந்த மீட்பு நடவடிக்கைக்காக கடற்படை இலங்கை கடற்படை கப்பலான சிதுரலவை நேற்று அனுப்பியது.

படகில் இருந்த ஆறு மீனவர்களில் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போனதாகவும், மற்றொருவர் சுமார் 11 நாட்களுக்குப் பின்னர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த மீட்கப்பட்ட நான்கு மீனவர்களும் மருத்துவ சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related