12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தொலைபேசி தடை! அரசாங்கத்தின் திட்டம்

1 week ago

12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நவீன தொலைப்பேசிகள் பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ள அரசாங்க தரப்பு அறிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பை பாடசாலை மாணவர்கள் கலந்துக் கொண்ட நிகழ்வொன்றில் பெண்கள் மற்றும் சிறுவர் நலத்துறை அமைச்சர் சரோஜா போல்ராஜ் வெளியிட்டுள்ளார்.


நோக்கம்

அதன்போது, 12 வயதுக்குட்பட்ட எந்த மாணவரும் தொலைபேசி வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படுவதைத் தடுக்க அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தொலைபேசி தடை! அரசாங்கத்தின் திட்டம் | Sl Plan To Ban Smartphone School Children Under 12

இந்த நடவடிக்கை, அதிகப்படியான திரை நேரம் மற்றும் தீங்கு விளைவிக்கும் நிகழ்நிலை உள்ளடக்கத்திற்கு ஆளாகாமல் சிறுவர்கள்ளை பாதுகாக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இது ஆரோக்கியமான பிள்ளைப் பருவ வளர்ச்சி மற்றும் சமூக தொடர்புகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025